- முகப்பு
- குறுஞ்செய்திகள்
- அனுரகுமாராவின் இந்திய விஜயத்தை வரவேற்றுள்ளார் ஜெய்சங்கர்
அனுரகுமாராவின் இந்திய விஜயத்தை வரவேற்றுள்ளார் ஜெய்சங்கர்
இலங்கை ஜனாதிபதி அனுரா திசநாயக்க அவர்களின் முதல் இந்திய விஜயத்தின் தொடக்கத்தில் அவர்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயிசங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடு இலங்கை என்ற வகையில் முதல் கொள்கை மற்றும் கடல் சார் ஆகிய இரண்டிற்கும் இலங்கை முக்கியமானது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை அதிக நம்பிக்கையையும் ஆழமான ஒத்துழைப்பையும் ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக டாக்டர் எஸ். ஜெயிசங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.