• முகப்பு
  • அரசியல்
  • விசிக மது ஒழிப்பு மாநாடு மக்கள் விழிப்புணர்வு இதில் அரசியல் கலக்கக்கூடாது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

விசிக மது ஒழிப்பு மாநாடு மக்கள் விழிப்புணர்வு இதில் அரசியல் கலக்கக்கூடாது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

JK

UPDATED: Sep 25, 2024, 10:54:34 AM

திருச்சி

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம் 2 பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையங்களில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் பயணத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்புலி வார்டு ரோடு, காந்தி மார்க்கெட், போன்ற பகுதியிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை உறையூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வர பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி 13நடைகள் இந்த வட்ட பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து  காலை 6.15மணிக்கு முதல் இயக்கப்படும் இரவு 8:30 மணி வரை இப்பேருந்து தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்ட பேருந்து இயக்கத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், தமிழ்நாடு போக்குவரத்து கழக திருச்சி கோட்ட பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மண்டல மேலாளர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

District News & Updates in Tamil

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல் பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக, திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது.

எனவே, திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் அமைக்க, அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை வைக்கப்படும். இதுகுறித்து ஏற்கனவே திருச்சி மூத்த அமைச்சர் கேஎன்.நேரு போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறார்.

Latest District News in Tamil

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் குறித்து விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்த கருத்து, அவரது கருத்து தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து என்று அவர்களது கட்சி நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதனால், இது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. திமுக அமைச்சர் முத்துசாமியும் இதை சொல்லி இருக்கிறார். எனவே, இதில் அரசியல் கலக்கக்கூடாது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார் அதையே நாங்களும் சொல்கிறோம். என தெரிவித்தார்.

VIDEOS

Recommended