• முகப்பு
  • குற்றம்
  • தேனி அல்லிநகரத்தில் பட்டப்பகலில் பெண் சரமாரியாக வெட்டி படுகொலை.

தேனி அல்லிநகரத்தில் பட்டப்பகலில் பெண் சரமாரியாக வெட்டி படுகொலை.

ராஜா

UPDATED: Dec 19, 2024, 10:49:18 AM

தேனி மாவட்டம்

அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் லீலாவதி (37). இவரது கணவர் சின்னச்சாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார். 

இந்த தம்பதியின் மகள் கௌசல்யா தேனியில் உள்ள ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கௌசல்யா ஜவுளி கடைக்கு பணிக்கு சென்ற நிலையில், இன்று காலை 10 மணி அளவில் கௌசல்யாவின் தாயார் லீலாவதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக கௌசல்யாவுக்கு தகவல் கிடைத்தது.

 

படுகொலை

கௌசல்யா விரைந்து வந்து வீட்டில் பார்த்தபோது அவரது தாயார் லீலாவதி இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கௌசல்யா இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை ஆய்வு செய்தனர்.

இதில் அவரது தலை வலது பக்க புஜம் மற்றும் பின் கழுத்து,வலது கை என சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இது தொடர்பாக அல்லிநகரம் காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் தடய அறிவியல் துறையினர், மற்றும் மோப்ப நாய் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

Latest Crime News Today In Tamil 

கொலைக்கான காரணம் குறித்தும், யார் கொலை செய்தது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

லீலாவதியின் மகள் கௌசல்யாவிற்கும், திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து (30). என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பத்திரத்தில் இருவரிடமும் கையெழுத்து வாங்கி பேசி பிரித்து வைத்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தனது தாயாருடன் அல்லிநகரத்தில் வசித்து வரும் கௌசல்யா தேனியில் உள்ள ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

Breaking News Today In Tamil 

கௌசல்யாவை தன்னுடன் வருமாறு பிச்சைமுத்து பலமுறை அழைத்த போதும் கௌசல்யாவின் தாயார் லீலாவதி அவரை பிச்சைமுத்து உடன் அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது. 

இந்த ஆத்திரத்தில் லீலாவதியை பிச்சைமுத்து கொலை செய்திருக்கலாமா? என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended