குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசின் திருகாணி.

JK

UPDATED: Dec 17, 2024, 5:51:36 PM

திருச்சி

பெரம்பலூா் மாவட்டம், எருதுபட்டியைச் சோ்ந்த 3வயது ஆண் குழந்தை கால் கொலுசின் திருகாணி தவறுதலாக விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோா் குழந்தையை இலுப்பூா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு எக்ஸ்ரே எடுத்து பாா்த்ததில் அந்த திருகாணி குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனா்.

Latest Trichy News 

மருத்துவமனையின் முதல்வர் குமரவேல் தலைமையில் காது மூக்கு தொண்டை அறுவைசிகிச்சை துறைத் தலைவா் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியா் அண்ணாமலை, மயக்கவியல் துறை பேராசிரியா் செந்தில்குமாா் மோகன் ஆகியோா் கொண்ட குழுவினா், குழந்தைக்கு மயக்கமளித்து, உள்நோக்கி (ரிஜிடு பிராங்கோஸ்கோப்) மூலம் பிரதான மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசு திருகாணியை ரத்தப்போக்கு, மூச்சுவிடுதலில் சிரமமின்றி வெற்றிகரமாக அகற்றினா்.

தற்போது குழந்தை நலமுடன் உள்ளது. அந்தத் திருகாணியை விட்டிருந்தால் இன்னும் பல பகுதிகளுக்குச் சென்று தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

VIDEOS

Recommended