இலவச பட்டா பெற்ற நபர்களுக்கு தெரியாமல் இ - பட்டாவில் பெயர் நீக்கம் செய்து மோசடி செய்த கவுன்சிலர்
ராஜ்குமார்
UPDATED: Dec 16, 2024, 4:29:06 PM
கோவை
மதுக்கரை தாலுக்கா, செட்டிபாளையம் பேரூராட்சி அண்ணா நகர் மற்றும் கலைஞர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ராணாசங்கர் தலைமையில் பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில் கடந்த 18 ஆண்டுகளாக சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 2006 ஆம் வருடம் சில பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.
Latest Coimbatore News
மற்றும் 2015 ஆம் வருடம் சில பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் எங்கள் 14 வது வார்டு கவுன்சிலர் வேலுமணி ஏற்கனவே இலவச வீட்டுமனை பட்டா பெற்று வசித்து வரும் சிலரது பட்டாக்களை நீக்கம் செய்து .
இ-பட்டா என்ற பெயரில் ஏற்கனவே பட்டா பெற்று உள்ள நபர்களுக்கு தெரியாமல் நீக்கம் செய்து விட்டு தகுதியில்லாத வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்து உள்ளார்.
இது சம்பந்தமாக கவுன்சிலர் வேலுமணியிடம் கேட்ட போது அடியாளை வைத்து மிரட்டி வருகிறார். இந்த பகுதிகளுக்கு மின் இணைப்பு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி என இதுவரை எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
Breaking News Today In Tamil
இதனால் வயது வந்த முதியோர்களும், பள்ளி செல்லக் கூடிய குழந்தைகளும், உடல் ஊனமுற்றோர்களும், பொது மக்களும் மிகவும் கஷ்டப்பட்டு துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம்.
இது சம்பந்தமாக பல முறை வட்டாட்சியர் உட்பட பல அதிகாரிகளுக்கு பல மனுக்கள் கொடுத்தும் இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே, நடவடிக்கை எடுத்து பட்டா தர நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.