- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவாரூரில் 41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் ,வணிக வளாகங்கள் அடிக்கல் நாட்டு விழா.
திருவாரூரில் 41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் ,வணிக வளாகங்கள் அடிக்கல் நாட்டு விழா.
ஜெயராமன்
UPDATED: Jan 24, 2024, 7:20:08 PM
திருவாரூர் நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை முன்மாதிரி பேருந்து நிலையமாக மாற்றும் வகையில் 16 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலும்
மார்க்கெட் அகத்தி புதிய வணிக வளாகம் 13 கோடியே 27 லட்ச ரூபாய் மதிப்பிலும் மீன் மார்க்கெட் ஐந்து கூடிய 42 லட்ச ரூபாய் மதிப்பிலும்
திருவாரூர் நகர் பகுதியில் மட்டும் 34 கோடியே 99 லட்ச ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தையும் கேந்திர வித்யாலயா மற்றும் பேராசிரியர்கள் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில்
சுமார் 6 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான வெட்டாறு குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் என்கிற கலியபெருமாள் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.