பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது.
சண்முகம்
UPDATED: Dec 18, 2024, 1:14:33 PM
கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் அருகே மாமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மலர் செல்வன் (50) என்பவர் வேதியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இவர், இப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பயின்ற 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதனையடுத்து வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனைக்கு மாணவி சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
போக்சோ
இதனையடுத்து மருத்துவர்கள் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளியில் வகுப்பு எடுத்து கொண்டிருந்த ஆசிரியர் மலர் செல்வனை சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து போக்சோவில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு, பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியரே இது போன்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.