• முகப்பு
  • போக்சோ
  • 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்த 37வயதுடைய காமகொடூரன்.

8 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்த 37வயதுடைய காமகொடூரன்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 29, 2024, 7:14:31 PM

காஞ்சிபுரம்

பிள்ளையார்பாளையம் கச்சிஸ்புரம் தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 37). இவர் எலக்ட்ரீசியனாக ஆக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வீட்டுக்கு அருகாமையில் மூன்றாவது படிக்கும் எட்டு வயதுடைய சிறுமி யை தன்னுடைய வீட்டிற்க்கு அழைத்து உணவு பண்டங்களை கொடுத்து வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமியை காணாமல் பெற்றோர்கள் ஆங்காங்கேதேடி வந்த நிலையில் இளங்கோவனின் வீட்டில் இருந்து சிறுமி வருவதை கவனித்த பெற்றோர்கள், அந்த சிறுமியிடம் என்ன ஏது என கேட்டபோது, அந்த சிறுமி மாடியில் நடந்தவற்றை கூறியுள்ளார்.

POCSO

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் சிவகாஞ்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த சிவகாஞ்சி காவல்துறையினர் மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரிக்க கூறினர்.

அதன்பேரில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி அவர்கள் சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். அதில் இளங்கோவன் சிறுமியிடம் மிகவும் அத்துமீறி பாலியல் வன்புணர்வில் நடந்து கொண்டது உறுதியானது.

அதனையடுத்து இளங்கோவனை கைது செய்த மகளிர் காவல்துறையினர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் இளங்கோவனை சிறையில் அடைத்தனர். 

Breaking News Today In Tamil 

மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மிகுந்த ஆவேசத்துடன் கூறினர்.

போக்சோ உள்ளிட்ட பல தகவல்களை காவல்துறையினர் செய்தியாளருக்கு தர மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended