- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சிலிண்டர் மீன்பிடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலிண்டர் மீன்பிடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்மேகம்
UPDATED: Dec 2, 2024, 7:31:06 AM
இராமநாதபுரம்
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத சிலிண்டர் மீன்பிடிப்பை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கம் ( ஏ.ஐ.டி.யு.சி.) மாவட்ட தலைவர் கணேசன் செயலாளர் கருணாமூர்த்தி ஆகியோர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது
சமிப காலமாக சிலிண்டரை பயன்படுத்தி மீன்பிடிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
AITUC
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி நாலுபனை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் குடும்ப வறுமை காரணமாக நேற்று தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் இருந்து ஆபத்தான சிலிண்டர் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ளான் கடலுக்குள் மூழ்கி 3- மணி நேரம் வரை சிலிண்டர் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்ட போது மூச்சு திணறி பரிதாபமாக பலியாகி உள்ளான்
சிலிண்டர் மீன் பிடிப்பு
சிலிண்டர் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டு இறந்ததை மறைக்கும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட சிலிண்டர் மீன்பிடிப்பாளர்கள் ஈடுபடுவார்கள் இதற்கு மீன்வளத்துறையும் அரசு நிர்வாகம் துணை போகக் கூடாது சமிப காலமாக சிலிண்டர் மீன் பிடிப்பு என்பதும் அதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது
Breaking News Today In Tamil
இதற்கு முன்னர் கீழ முந்தல் கிராமத்தை சேர்ந்த வேடலிங்கம் என்பவர் சிலிண்டர் முறையில் மீன் பிடித்த போது பலியானார் என்பது குறிப்பிட தக்கது
எனவே இறந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல் அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 10. லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் சட்ட விரோதமாக சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறையை தடுக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.