• முகப்பு
  • குற்றம்
  • வாக்குமூலத்தை வைத்து விசாரணை வேண்டாம் நடிகை மாலா பார்வதி பரபரப்பு.

வாக்குமூலத்தை வைத்து விசாரணை வேண்டாம் நடிகை மாலா பார்வதி பரபரப்பு.

கார்மேகம்

UPDATED: Dec 1, 2024, 10:17:12 AM

ஹேமா கமிட்டி

கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவையே புரட்டி போட்டது ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து  வெளிப்படுத்தி வருகிறார்கள்

ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள்

மாலா பார்வதி

இந்த நிலையில் தான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என நடிகை மாலா பார்வதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து மாலா பார்வதி கூறுகையில் 

ஹேமா கமிட்டியில் நாங்கள் வாக்குமூலம் அளிக்கும் போது அதை வழக்குக்கான புகாராக அளிக்கவில்லை பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளிப்படையாக அனைத்தையும் கூறினோம் எனக்கு புகார் அளிக்கும் எண்ணமோ வழக்குப் பதிவு செய்து வழக்கு தொடுக்கும் எண்ணமோ இல்லை எனக் கூறிய பிறகும் அது பற்றி விசாரணை நடத்தி சிலரை தொந்தரவு செய்திருக்கிறார்கள்

மலையாள சினிமா

இது என்னை தனிப்பட்ட முறையில் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது எனவே தான் எனது வாக்கு மூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு விசாரணை நடத்தக் கூடாது என நான் சுப்ரீம் கோர்ட்டில் மனு  அளித்துள்ளேன் என்றார்

மாலா பார்வதியின் இந்த நிலைப்பாட்டுக்கு மலையாள சினிமாவின் பெண்கள்  அமைப்பு  டபிள்யூ.சி.சி.எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

 

VIDEOS

Recommended