திருடன்களை பிடித்ததற்காக உறவினர்கள் தடுத்து அடாவடி

சண்முகம்

UPDATED: Nov 30, 2024, 7:36:34 AM

கடலூர் மாவட்டம் 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போயிருந்தது இது தொடர்பாக சிதம்பரம் காவல்துறையினர் உத்தரவின் பேரில் சிதம்பரம் காவல்துறை கண்காணிப்பாளர் அகஸ்டியன் ஜேசுவா லாமேக் மேற்பார்வையில் சிதம்பரத்தில் கிரைம் காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் பரணிதரன் சிதம்பர உட்கோட்ட குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாபு கோபி மற்றும் காவலர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா ஆய்வு செய்தனர்

இது தொடர்பாக குமார் என்கின்ற ஜெயக்குமார் வடலூர் சேர்ந்தவர் மற்றும் பார்த்திபன் வயது 22 நெய்வேலியை சேர்ந்தவர் இருவரையும் சிசிடிவி கேமரா உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு சிதம்பரம் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை செய்ததில் இவர்கள் எட்டுக்கும் மேற்பட்ட டூவீலரை திருடியதாக ஒப்புக்கொண்டார்கள் பின்பு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பொழுது குற்றவாளியின் மனைவியும் உறவினர்களும் காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசி கலாட்டாவில் ஈடுபட்டனர்

பின்பு நடுரோட்டிற்கு சென்று கலாட்டா செய்தனர் இதனால் காவல்துறையினர் அவர்களை மிகுந்த சிரமத்துடன் அப்புறப்படுத்தினர் பின்பு குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் இதனால் சிதம்பரம் காவல் நிலையம் முன்பு ஒரு 15 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது குறிப்பாக  செய்தியாளர் செல்போனை தட்டி விட்டு கொலை மிரட்டல் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended