விமானத்தில் கொண்டு வந்த அரிய வகை  பல்லிகள்.

JK

UPDATED: Dec 2, 2024, 4:19:13 AM

திருச்சி

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்குநூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் விமானம் வந்தது.

அதில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகளையும், சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். 

அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த கூடையில் ஏதோ உயிரினம் தெரிய வந்தது. சுங்கத்துறையினர் கூடையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த பிளாஸ்டிக் டப்பாக்களில் அரிய வகை பல்லிகள் இருப்பது தெரிய வந்தது.

அபூர்வ வகை பல்லிகள்

இந்த வகையான பல்லிகள் தென்ஆப்பிரிக்கா, வட அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள வனப்பகுதியில் வாழும் அபூர்வ வகையை சேர்ந்ததாகும்.

இதில் 4சிறிய தேகு வகை பல்லிகள், வடஅமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரிய குள்ளநரி வகையை சேர்ந்த ரக்கூன் குட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அந்த பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை என்பதால் அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்ததாக கூறினார்.

Latest Trichy News Today In Tamil 

ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து அவற்றுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. 

மேலும், சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து திருச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended