• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாபநாசம் அருகே பழைய வீடு இடிக்கப்பட்ட போது இடுபாடுகளில் சிக்கி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

பாபநாசம் அருகே பழைய வீடு இடிக்கப்பட்ட போது இடுபாடுகளில் சிக்கி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

ஆர்.தீனதயாளன்

UPDATED: Dec 2, 2024, 3:56:37 AM

தஞ்சாவூர் மாவட்டம்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசித்து வருபவர் பைசல். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது பழைய வீட்டை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுடன் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த குணசேகரன் மகன் மணிகண்டன் (27) என்பவரும், அய்யம்பேட்டை இரட்டை தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் குமார் (20) என்பவரும் ஈடுபட்டு வந்தனர்.

Breaking News Today In Tamil 

இந்நிலையில் வீடு இடித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சுவர் விழுந்து இடுப்பாடுகளில் இரண்டு வாலிபர்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended