• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்.

மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்.

செந்தில் முருகன்

UPDATED: Feb 21, 2024, 8:33:46 AM

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் முதல் ஊராட்சியாக பண்டாரவாடை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

Also Read : வங்கி கடனை கேட்ட அதிகாரிகளுக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்

பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அவர் ஆய்வு செய்தார் அப்போது, வெளிச்சம் இல்லாத அறையில் அமர்ந்து படிப்பதை கண்டு அங்கு மின்விளக்கு எரியவிட உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், மதிய உணவு உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

Also Read : மன்னார்குடி அருகே கோயில் சொந்தமான இடத்தில் காடுகளை அழித்து அரசு நெல் சேமிப்புக் கிடங்கு மக்கள் எதிர்ப்பு.

தொடர்ந்து மாணவர்களை படிக்கச் சொல்லி அவர்களது கற்றல் திறனை ஆய்வு செய்தார்.

அப்போது மாணவர்கள் ஆங்கில பாடத்தை வாசிக்க திணறியதை தொடர்ந்து, மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வாசிக்கக் கூட கற்றுத் தரவில்லையா? என பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார்.

Also Read : பொன்னேரியில் 25 வருடங்களுக்குப் பிறகு போடப்படும் சாலை தரமற்று இருப்பதாக மக்கள் புகார்.

தொடர்ந்து பண்டாரவாடை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, வடிகால் வாய்க்கால் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது கிராம மக்களுக்கு மாடு வாங்க கடனுதவி வழங்குவதுடன், ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended