• முகப்பு
  • இந்தியா
  • அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் நாங்களும் அதையே செய்வோம் இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் நாங்களும் அதையே செய்வோம் இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

கார்மேகம்

UPDATED: Dec 19, 2024, 10:07:22 AM

வாஷிங்டன்

அமெரிக்க பொருட்களுக்கு நீங்கள் அதிக வரி விதித்தால் நாங்களும் அதை செய்வோம் என இந்தியாவிக்கு டிரம்ப்  எச்சரிக்கை விடுத்துள்ளார்

( இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவு )

இந்தியா மற்றும் அமெரிக்கா சிறந்த வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வருகின்றன

சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது அதே சமயம் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி வகித்த காலத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் சிக்கல் நீடித்தது இதற்கு காரணம் அமெரிக்காவின் சில பொருட்களுக்கு இந்தியா அதிகளவில் வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டினார்.

டிரம்ப்

அது மட்டும் இன்றி அதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அதிக வரியை விதித்தார் இது இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது 

பின்னர் 2020 ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்து ஜோபைடன் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா- அமெரிக்கா வர்த்தக உறவு சீரானது

( அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி)

இந்த சூழலில் அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார் அவர் அடுத்த  மாதம் ( ஜனவரி) அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

வரி

இந்த நிலையில் தங்களின் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்தால் அவர்களுக்கு நாங்களும் அதையே செய்வோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார் 

புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார்

இது குறித்து அவர் கூறியதாவது :

இந்தியா பிரேசில்

அமெரிக்காவின் சில பொருட்களுக்கு அதிக அளவு வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் பிரேசிலும் முதன்மையான இடத்தில் உள்ளன எனவே இங்கு பரஸ்பரம் என்ற வார்த்தை முக்கியமானதாக உள்ளது ( அதாவது அவர்கள் இந்தியா பிரேசில் ) எங்களுக்கு அதிக வரி விதித்தால்  நாங்களும் அதே அளவு வரி விதிப்போம் என்றார்.

 

VIDEOS

Recommended