வாலாஜாவில் போலி மருத்துவர் கைது

பரணி

UPDATED: Dec 20, 2024, 6:32:43 PM

ராணிப்பேட்டை மாவட்டம்

வாலாஜாபேட்டை அடுத்த வன்னி வேடு தொட்டி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சங்கர்( வயது 73). இவர் அதே பகுதியில் அக்குபஞ் சர் கிளினிக் ஒன்றை வைத்து நட த்தி வருகிறார். 

இந்த நிலையில் அவர் ஆங்கில மருத்துவம் பார்ப் பதாக எழுந்த புகாரின் அடிப்படை யில் வாலாஜாபேட்டை தலைமை மருத்துவமனை மருத்துவர் கபிலன் தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

போலி மருத்துவர்

ஆங்கில மருத்துவம் பார்த்தது உறுதியான நிலையில் போலி மருத்துவர் சங்கரை வாலாஜாபே ட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கிளீனிக்கை பூட்டி சீல் வைத்தனர். 

பின்னர் வாலாஜா போலீசார் இச்சம்பவம் குறித்து சங்கர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended