• முகப்பு
  • குற்றம்
  • கோவில்பட்டி தாசில்தார் மற்றும் டிரைவர் 2 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

கோவில்பட்டி தாசில்தார் மற்றும் டிரைவர் 2 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

மாரிமுத்து

UPDATED: Jun 14, 2023, 1:11:33 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர்ந்து தங்களுடைய பணிகளை செய்வதற்கும் சட்டத்துக்கு புறம்பான சில பணிகளை செய்வதற்கும் அரசு அதிகாரிகள் முதல் அரசு பணியாளர்கள் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

லஞ்ச ஒழிப்பு துறையும் கைது நடவடிக்கை தொடர்ந்தாலும் லஞ்சம் வாங்குவது என்பது அரசு பணியாளர்கள் மத்தியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கோவில்பட்டி தாசில்தாராக பணியாற்றி வரும் வசந்த மல்லிகா தொடர்ந்து பல்வேறு புகாருக்கு ஆளாகி வந்தார்.

இந்த நிலையில் கோவில்பட்டி பகுதியில் ராஜா ராம் என்பவர் தன்னுடைய வீட்டுக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பம் செய்து தாசில்தார் வசந்த மல்லிகாவை சந்தித்துள்ளார்.

அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் தனக்கு முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார் கொடுக்க மனம் இல்லாத ராஜாராம் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பு கொண்டு உள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் உத்தரவின் பெயரில் ராஜாராம் புதன்கிழமை கோவில்பட்டி தாசில்தார் வசந்த மல்லிகாவுக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாசில்தார் வசந்த மல்லிகா பணம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனை அடுத்து அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் ஆய்வாளர் அனிதா, உதவி ஆய்வாளர்கள் தளவாய் ஜம்புநாதன், பாண்டி, சுந்தரவேல் மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து கோவில்பட்டி தாசிலர் வசந்த மல்லிகா அவருடைய கார் டிரைவர் கிருஷ்ணா ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்பு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆஜர் படுத்தி உள்ளனர்.

வருவாய்த்துறை சேர்ந்த தாசில்தார் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பிடிபட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் மட்டுமின்றி வருவாய்த் துறையினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

VIDEOS

Recommended