தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் தொகை வசூல் நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்.
மாரிமுத்து
UPDATED: May 24, 2023, 10:40:02 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் 180 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபான கடைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் இரண்டு அல்லது மூன்று விற்பனை பிரதிநிதிகள் உள்ளன.
ஒவ்வொரு கடைகளுக்கும் ஆனால் அரசு நிர்ணயித்த விலையை டாஸ்மாக் கடை பணியாளர்கள் வசூல் செய்வது கிடையாது கூடுதலாக வசூல் செய்கின்றனர் 135 குவாட்டர் விலை 140 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது 165 ரூபாய் குவாட்டர் பாட்டிலை 170 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
அது போல ஆப் பாட்டலுக்கு பத்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கின்றனர் அதுபோல ஃபுல் பாட்டலுக்கு 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.
அதுபோல பீர் பாட்டிலுக்கு 25 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றன, சராசரி நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் இந்த கூடுதல் தொகையை வசூலிப்பதன் மூலம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தினசரி கிடைக்கிறது.
பண்டிகை காலங்களில் மதுபானம் அதிக அளவில் விற்பனை ஆகும் போது அப்பொழுது இதைவிட கூடுதலாக கடையில் உள்ள பணியாளர்களுக்கு கிடைக்கிறது.
கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் சூப்பர்வைசர் மற்றும் பணியாளர்கள் மீது இன்று வரை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாஸ்மாக் தாசில்தார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தது கிடையாது காரணம் ஏன் என்று புரியவில்லை.
ஒவ்வொரு கடையிலும் கூடுதல் தொகைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் தொகையில் கீழ் அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை லஞ்சம் கொடுப்பதால் கண்டும் காணாமல் இருப்பதாக தெரிய வருகிறது.
டாஸ்மாக் மதுபான கடையில் அங்கு இருக்கும் பணியாளர்கள் கூடுதலாக பாட்டிலுக்கு தொகை வைத்து வசூலிப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ஆகையால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உடனடியாக அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சூப்பர்வைசர் மற்றும் பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தான் மதுபான பிரியர்களின் கோரிக்கையாகவே உள்ளது.