• முகப்பு
  • இந்தியா
  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு.

கார்மேகம்

UPDATED: Dec 18, 2024, 9:37:35 AM

டெல்லி

அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது

மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கே இந்த மசோதா எதிரானவை என்று சமாஜ்வாடி எம்.பி. கூறினார்

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்ததால் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது 

ஒரே நாடு ஒரே தேர்தல் 

மக்களவை மாநில சட்ட சபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப் பட்டு வந்தது இந்த நிலையில் இது தொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக முன்னால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது இந்த குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர்

இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது 

இந்த அறிக்கையை மத்திய மந்திரி சபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது

India Today News

இதைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல்  திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது

இந்த மசோதாவிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது 

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது

மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த  மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

VIDEOS

Recommended