பாதியிலேயே நழுவிய தி.மு.க. எம்.பிக்கள்.
கார்மேகம்
UPDATED: Dec 6, 2024, 1:05:05 PM
டெல்லி
அதானி லஞ்ச விவகாரம் தொடர்பாக வித்தியாசமான போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் புதிய பார்லிமென்டின் பிரதான நுழைவாயிலான மகர் துவார் முன் நேற்று காலை 10.30 மணிக்கு காங் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்கள் கூடினர்
வந்திருந்த அனைவரும் கருப்பு நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்தனர் ( மகர்) (துவார்) படிக்கட்டுகளில் நின்றபடி எப்போதும் ஆர்ப்பாட்டம் நடத்துவர் ஆனால் இவ்வாறு படிக்கட்டுகளில் நின்று போவோர் வருவோருக்கு இடையூறு செய்வதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என லோக்சபா செயலகம் அறிவுறுத்தி இருந்தது
இதனையடுத்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதை தவிர்த்து விட்டு ( மகர்) ( துவார் ) வாயில் முன்பாக இருக்கும் காலி இடத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்
தி.மு.க எம்.பிக்கள்
கோஷங்களை எழுப்பிய போது திரிணாமுல் காங் சமாஜ்வாதி கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லை வந்திருந்த முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க. வின் எம்.பிக்கள் கருப்பு நிற ஜெர்கினை அணியாமல் தவிர்த்து விட்டனர் கடந்த இரண்டு நாட்களாக முன்வரிசையில் நின்று தீவிரமான கோஷங்கள் போட்ட சில தி.மு.க.எம்.பிக்களை காணவில்லை வந்திருந்த சிலரும் பின்வரிசையில் நின்று கொண்டிருந்தனர்
பலரும் சுரத்தே இல்லாமலும் கோஷங்கள் போடாமலும் இருந்தனர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த எம்.பிக்கள் அங்கிருந்து ஊர்வலமாக பழைய பார்லி மென்ட் கட்டடத்தை நோக்கி சென்று அங்குள்ள படிக்கட்டுகளில் ஏறி நின்று கோஷமிட்டனர்
இந்த ஊர்வலத்தில் கனிமொழி பாலு ராஜா உள்ளிட்ட தி.மு.க.எம்.பிக்கள் யாரும் செல்ல வில்லை இது தெரியாமல் ஆர்வக்கோளாறில் அங்கு சென்றுவிட்ட அப்துல்லா அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் சட்டென சுதாரித்து மீண்டும் மகர் துவார் பகுதிக்கே வந்து விட்டனர்
காங்கிரஸ் எம்.பிக்கள் ஊர்வலம்
பின்பு காங்கிரஸ் எம்.பிக்கள் புதிய மற்றும் பழைய பார்லிமென்ட் கட்டிடங்களுக்கு இடையிலான பகுதியில் கோஷமிட்ட படியே ஊர்வலமாக வலம் வரத் துவங்கினர் இதை தூரத்திலிருந்து பார்த்தவுடன் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை தி.மு.க. எம்.பிக்கள் அனைவரும் அங்கிருந்து நழுவி சென்று விட்டனர்
கூட்டணி கட்சிகள்
தி.மு.க.எம்.பிக்கள் தான் காங்கிரசை அம்போவென பாதியிலேயே கைகழுவி விட்டுச் சென்றனரே தவிர கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க. வைகோ வீ.சி.க. ரவிக்குமார் முஸ்லீம் லீக் நவாஸ்கனி ஆகியோர் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் முழுவதுமாக கலந்து கொண்டு வலம் வந்தனர்
நடப்பதற்கு சிரமப்பட்ட வைக்கோவை அவரது கையைப்பிடித்து பாதுகாப்பாக ராகுல் தன்னுடன் ஊர்வலத்தில் அழைத்து வந்ததைக் காண முடிந்தது.