இயற்கை விவசாயம் முதல் PAN 2.0 வரை அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.
கார்மேகம்
UPDATED: Nov 27, 2024, 1:06:25 PM
டெல்லி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை மேற்கொள்வதை இலக்காகக் கொண்ட பல முக்கிய முயற்சிகளுக்கு அங்கிகாரம் அளித்துள்ளது
PAN 2.0
அதனடிப்படையில் இந்திய இரயில்வேக்கான மல்டிட்ராக் திட்டங்கள் அருணாச்சல பிரதேசத்தில் நீர் மின் திட்டங்களில் குறிப்பிடதக்க முதலீடுகள் வருமான வரித் துறைக்கான PAN 2.0 திட்டம் மற்றும் அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தின் { A I M } தொடர்ச்சி ஆகியவை இதில் அடங்கும்
இந்த திட்டங்கள் மில்லியன் கணக்கான கோடி செலவில் இணைப்புகளை அதிகரிக்கவும் பொருளாதார வளர்ச்சியை தூண்டவும் நாடு முழுவதும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பு சூழலை உருவாக்கவும் நோக்கமாக உள்ளது
இயற்கை வேளாண்மை
இதில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய பணியை (NMNF) தொடங்குவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது
இதற்காக ரூ.2.481- கோடி செலவிடப்படும் இயற்கை விவசாயம் என்ற இந்த லட்சிய திட்டத்தின் கீழ் 1- கோடி விவசாயிகளை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை முடிவு குறித்த தகவல் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாட்டில் 2019- 20 முதல் இயற்கை விவசாயம் பற்றி சோதனை செய்யப்பட்டது அது நல்ல பலனைத் தந்தது அனைத் தொடர்ந்து பலர் அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்யத் தொடங்கினர்
Latest India News Today In Tamil
இதற்குப் பிறகு 2022 - 23ல் மற்றொரு பெரிய சோதனை செய்யப்பட்டது இதன் கீழ் கங்கை நதியின் இருபுறமும் 5 -5 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு நடை பாதையில் இயற்கை உருவாக்கம் மற்றும் இராசயன மற்ற வடிவங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன இந்த இரண்டு சோதனைகளும் நல்ல பலனைத் தந்தன இதன் கீழ் நாடு முழுவதும் 9.6 லட்சம் ஹெக்டேர் பரப்பு மேற்கொள்ளப்பட்டது
India Today
இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது அரசு இந்தப் பணியை தொடங்கியுள்ளது அதனால் பூமியின் ஆரோக்கியம் நன்றாக இருப்பதோடு மக்களுக்கு ரசாயனமில்லாத உணவுப் பொருட்கள் கிடைக்கும் இயற்கை விவசாயம் செய்யத் தயாராக இருக்கும் மக்கள் அல்லது பஞ்சாயத்துகளை முன்னோக்கி இத் திட்டம் கொண்டு வருவதற்கு நிறைய கவனம் செலுத்தப்படுகிறது அத்தகையவர்களுக்கு முழு உதவி வழங்கப்படும்
Today's India News In Tamil
அதனைத் தொடர்ந்து இந்திய ரயில்வேக்கான மல்டி டிராக்கிங் திட்டங்கள் டாட்டோ- 1- ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தில் முதலீடு செய்வது ஹியோ ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல் வருமான வரித் துறைக்கான PAN 2.0 திட்டம் அடல் இன்னோவேஷன் மிஷனின் ஏ.ஐ.எம். தொடர்ச்சி மற்றும் ஒரே நாடு ஒரு சந்தா திட்டம் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.