2500 ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் சேதம் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை.
தருண்சுரேஷ்
UPDATED: Nov 27, 2024, 6:57:04 PM
திருவாரூர் மாவட்டம்
தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக தொடர்ந்து இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்
Latest Thiruvarur News In Tamil
இந்நிலையில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றியுள்ள அத்திக்கோட்டை , பல்லாக்கொல்லை , பேரையூர், செருமங்கலம் , நெம்மேலி, கோட்டுர் அருகே உள்ள கருவகுளம் , காசாங்குளம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி, காளாச்சேரி , உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக வளர்ந்த சம்பா நெற்பயிர்கள் மற்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட தாளடி நெற்பயிர்கள் மழைநீரீல் மூழ்கியுள்ளது
வேளாண்துறை
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர்களை எந்த விதமான குளறுபடிகள் இல்லாமல் உரிய முறையில் கணக்கெடுத்து உரிய மகசூல் இழப்பை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக முதல்வர்க்கு கொரிக்கை விடுத்துள்ளனர்.