• முகப்பு
  • விவசாயம்
  • கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டிய பிறகு கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை 

கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டிய பிறகு கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை 

JK

UPDATED: Nov 22, 2024, 1:19:48 PM

திருச்சி மாவட்டம் 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அலுவலகம் வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை கேட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஒப்பந்த நிறுவனம் மணல் திருடியது உறுதி செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

விவசாயிகள்

தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அப்போது ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் சிவகங்கைக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வேண்டும்.

கூட்டுக் குடிநீர் திட்டம்

கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டிய பிறகு கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், மேலும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக காவிரி ஆற்றில் மணல் கொள்ளையடிப்பதை தடை செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதியில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.

 

VIDEOS

Recommended