• முகப்பு
  • மருத்துவம்
  • திருச்சி மருத்துவமனையில் மறுஜென்மம் பெற்ற சத்தீஸ்கர் வாலிபர் - 2000 அறுவை சிகிச்சை சந்தித்த திருச்சி பிரபல மருத்துவர்.

திருச்சி மருத்துவமனையில் மறுஜென்மம் பெற்ற சத்தீஸ்கர் வாலிபர் - 2000 அறுவை சிகிச்சை சந்தித்த திருச்சி பிரபல மருத்துவர்.

JK

UPDATED: Dec 21, 2024, 7:28:20 PM

திருச்சி

தில்லைநகரில் உள்ள ராயல் பேர்ல் மருத்துவமனையில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 22வயது வாலிபருக்கு சிகிச்சை அளித்தது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராமன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து அகர்வால் என்ற 22வயது வாலிபர் மூளையின் கீழ் பாகத்தில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக மயக்க நிலை அடைந்தார். உடனே அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் காது மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர் தீவிர சிகிச்சைக்குப் பின்பு மேல் சிகிச்சைக்காக தமிழகத்தில் திருச்சியில் இருக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனையை பரிந்துரை செய்தார். 

இந்நிலையில் நோயாளி மயக்க நிலையில் இருந்த காரணத்தினால் ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் தனி ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனைக்கு அடைத்து வந்தனர்.

உடனடியாக வாலிபருக்கு எனது தலைமையில் நரம்பியல் நிபுணர் விஜயகுமார், மயக்கவியல் மருத்துவர் பாலமுருகன், கண் அறுவை சிகிச்சை நிபுணர் கணேஷ், மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயசங்கர், மற்றும் மருத்துவர்கள் விக்னேஷ்வர், சந்திரசேகர், சில்பி, மான்சி குழுவினர் உடனடியாக புரிய பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். தீவிர சிகிச்சைக்கு பின்னர் மறுநாளே மயக்க நிலையில் இருந்து வாலிபர் இயல்பு நிலைக்கு தற்போது திரும்பினார். சிகிச்சை முடிந்து அவர் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார் என தெரிவித்தார்.

மேலும் எமது மருத்துவமனைக்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான நோயாளிகள் வருகை தருகிறார்கள். நான் இதுவரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமல்லாமல் உலகின் 27நாடுகளுக்கு சென்று ஸ்கல்பேஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளேன் நான் இதுவரை 2000க்கும் மேற்பட்ட ஸ்கல் பேஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளேன் என தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் போது மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர்கள் சோமசுந்தரம், வியாகுல மேரி மற்றும் மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.

 

VIDEOS

Recommended