• முகப்பு
  • மருத்துவம்
  • திருச்சியில் புற்றுநோய் மருத்துவமனையில் மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்தோருக்கான சந்திப்பு.

திருச்சியில் புற்றுநோய் மருத்துவமனையில் மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்தோருக்கான சந்திப்பு.

JK

UPDATED: Oct 22, 2024, 6:32:19 PM

திருச்சி

ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயினால் உலக அளவில் பல லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைப்பற்றி போதிய விழிப்பணர்வு பெண்களிடம் இல்லாததே காரணமாகும். 

பெண்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணாவை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் மாதம் முழுவதும் பிங்க அக்டோபர் மாதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனை புற்றுநோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ரோஸ் கார்டன் இலவச அறக்கட்டளை இணைந்து புற்றுநோயிலிருந்து குணமடைந்தோருக்கான சந்திப்பு நிகழ்ச்சி மருத்துவமையில் நடைபெற்றது.

புற்றுநோய் விழிப்புணர்வு

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கலைமாமணி நித்யா ரவிந்திரன் கலந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உரையாற்றினார். 

50க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கலந்து கொண்டனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

மார்பக புற்றுநோய் 

மேலும், மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள் தங்களுக்கு உண்டான சந்தேகங்களை குணமடைந்தோரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். 

மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜ்வர்தனன் பேசுகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

இந்நிகழ்வில் தனலட்சுமி மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மருத்துவர் துளசி, பாலாஜி மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் மெனமொழி, சர்வைட் செவிலியர் கல்லூரியில் செயலாளர் சகாயமேரி மற்றும் நிர்வாக இயக்குனர் மருத்துவர் சசிபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended