- முகப்பு
- மருத்துவம்
- வடக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு - ஆளுநர் உத்தரவு
வடக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு - ஆளுநர் உத்தரவு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Aug 8, 2024, 12:56:00 PM
வடக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாகாண ஆளுநர் கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதாரத் துறையை சார்ந்த முக்கியமான கலந்துரையாடல் இன்று (08/08/2024) மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில், மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாகாண சுகாதாரத் துறையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அவற்றை சரி செய்வதற்கான மாற்றங்கள் பற்றி இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவுகளை அமைக்குமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான ஆளணியை நியமித்து, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.
மேலும், வைத்தியசாலைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தரவுப் பொறிமுறையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தினார். மாகாண சுகாதார பணிப்பாளருக்கு, சுகாதாரத் துறையின் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் தேவைகள் தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார்.