- முகப்பு
- மருத்துவம்
- தியாவட்டுவான் முஅஸ்ஸா வீட்டுதிட்டத்தில் தொற்றாநோய் பரிசோதனை
தியாவட்டுவான் முஅஸ்ஸா வீட்டுதிட்டத்தில் தொற்றாநோய் பரிசோதனை
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
UPDATED: Sep 15, 2024, 11:10:44 AM
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொற்றாநோய் பரிசோதனை (NCD - CLINIC) நேற்று தியாவட்டவான், ஹிஜ்ரா நகர் முஅஸ்ஸா கிராம வீட்டுதிட்ட பள்ளிவாயலில் இடம் பெற்றது.
இதில் நீரிழிவு (சீனி பரிசோதனை) உயர் குறுதி அழுத்தம் (பிரஷர்) மற்றும் உடற்தினச்சுட்டி (BMI) ஆகிய பரிசோதனைகள் இடம்பெற்றன.
இப்பரிசோதனையில் கலந்து கொண்டோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைகளை வழங்க சுகாதார வைத்திய அதிகாரியினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ALSO READ | "உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்"
இப்பரிசோதனை முகாமில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ. நஜீப்கான், பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.அஎல்.எம்.நசீர், பொதுச்சுகாதார மருத்துவ மாது ஏ.எம்..றிஸ்பானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் பள்ளிவாயல் நிர்வாகத்தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.அரபாத், செயலாளர் ஹலீம் மற்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினர் ஆகியோரின் முழு ஏற்பாட்டில் இடம் பெற்றது.
முஅஸ்ஸா கிராம மக்கள் முழு ஒத்தழைப்பையும் வழங்கியிருந்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு