• முகப்பு
  • மருத்துவம்
  • காவேரி மருத்துவமனை 500 எலக்ட்ரோ பிசியாலிஜிகல் சிகிச்சைகளை செய்து முடித்து சாதனை.

காவேரி மருத்துவமனை 500 எலக்ட்ரோ பிசியாலிஜிகல் சிகிச்சைகளை செய்து முடித்து சாதனை.

JK

UPDATED: Oct 3, 2024, 2:46:27 PM

நாகப்பட்டினம் மாவட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் இருதய சிகிச்சைகாக சிறப்பு தனி பிரிவாக செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் கடந்த 3ஆண்டுகளில் சிறியவர், பெரியவர் என 500எலக்ட்ரோ பிசியாலிஜிகல் சிகிச்சைகளை செய்து முடித்து சாதனை செய்துள்ளது.

எலெக்ட்ரோ பிசியாலஜி (EP ) என்பது இதய சிகிச்சை பிரிவின் தனி சிறப்பாக நோயாளிகளின் சீரற்ற இதய துடிப்பு கோளாறுகளை கண்டறிந்து கையாள உதவுகிறது.

இதய நோய்

இதய நோயாளிகள் ஒரு EP ஆய்வகத்தில் தங்களை சோதனைக்கு உட்படுத்தி உபாதைகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். உயரிய அதி நவீன 3D தொழில்நுட்ப வசதிகள் கொண்ட எலக்ட்ரோ பிசியாலாஜி (EP Lab) ஆய்வகம் கடந்த 2021 ஆம் ஆண்டு காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் துவங்கபட்டது. 

கடந்த 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட சீரற்ற இதய துடிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, வங்காளதேசம் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

Latest Medicine News

2023ஆம் ஆண்டு நமது மாநிலத்தில் முதன் முறையாக பிரத்யேக குழந்தைகள் நல EP பிரிவு நிறுவபட்டது.  

எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் & இண்டர்வென்ஷனல் கார்டியாலாஜிஸ்ட் மருத்துவர் ஜோசப் கூறுகையில் : வெற்றிகரமாக சிகிச்சை பெற்ற

நோயாளிகள் எண்ணிக்கையை விட எங்களது இலக்கு சமூகத்தின் அனைத்து மக்களும் குறைந்த விலையில் இந்த பயனை அடைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Latest Medicine News

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செயல் இயக்குநர் செந்தில் குமார்  காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை தொடர்ந்து உலகத்தரமான நவீன கொண்டுவருவதில் முன்னோடியாக திகழ்கிறது.

தொழில்நுட்பங்களை இப்பகுதிக்கு எலக்ட்ரோபிசியாலஜி துறையில் எங்களின் சேவை நோயாளிகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், எங்கள் மருத்துவமனையில் எலக்ட்ரோ பிசியாலஜியில் (EP ) FNB பாடத்திட்டத்தை துவங்குவதற்கு NBE (தேசிய தேர்வு வாரியம்) அங்கீகரித்துள்ளது.

காவேரி மருத்துவமனை

நமது நாட்டில் EP சூப்பர் ஸ்பெஷாலிட்டி கல்வியை தொடங்க அங்கீகாரம் பெற்ற வெகு சில கார்பரேட் மருத்துவமனைகளில் காவேரி மருத்துவமனையில் ஒன்று என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended