திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை விவரம்.
சுரேஷ் பாபு
UPDATED: Oct 22, 2024, 6:45:12 PM
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயில் ஆகும்
இந்த திருக்கோயில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மாநிலம், மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய மலை கோவிலுக்கு வருகின்றனர்
மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கையாக நகை- பணம் ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
இப்படி பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட அனைத்தையும் இந்து சமய அறநிலைத்துறையிடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு திருத்தணி மலைக்கோவிலில் வசந்த மண்டபத்தில் உண்டியல் பணம் என்னும் பணியினை மேற்கொள்வதற்கு
திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ரமணி தலைமையில் திருக்கோயில் அறங்காவலர்கள்- வி. சுரேஷ் பாபு, மு.நாகன், ஆகியோருக்கு மேற்பார்வையில் உண்டியல் என்னும் பணியில் திருக்கோயில் ஊழியர்கள் திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்
உண்டியல் என்னும் பணியினை முடிவுற்ற பிறகு திருக்கோயில் நிர்வாகம் விவரத்தை தெரிவித்துள்ளனர்
1-பணம் ரூபாய்- 80,07,917, லட்சம்..
2-தங்கம்-234, கிராம்,.
3-வெள்ளி-3,456, கிராம்,