• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் கீழே வீழுந்து விபத்து ஏற்படும் அபாயம் .

செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் கீழே வீழுந்து விபத்து ஏற்படும் அபாயம் .

சுரேஷ் பாபு

UPDATED: Dec 3, 2024, 12:48:02 PM

திருவள்ளூர் மாவட்டம் 

சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்த ரயில் நிலையமாக இருப்பது செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் ஆகும் .

இந்த ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் இருந்தது. இந்த ரயில்வே கேட் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கான வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் கடந்து சென்று வந்தனர்.

இந்த ரயில் தண்டவாளம் வழியாக நாள்தோறும் 250-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Latest News Today In Tamil

செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில், நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்படும் சமயத்தில் அவசர பணிக்கும் மருத்துவ தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. 

இதனால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2011- ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பாலம் கட்டும் பணி அதே ஆண்டு துவக்கப்பட்டதால் ரயில்வே கேட் மூடப்பட்டது.

Breaking News Today In Tamil 

இதனால் ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்பவர்கள் சென்று வந்தனர். 

இந்நிலையில் தற்போது மூன்று நாட்கள் பெய்த மழையால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் அந்த தண்ணீரை கடக்கும் போது பாம்பு போன்ற விஷ பூச்சிகள் தாக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் குண்டும் குழியுமான சாலையில் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

அதே போல் ரயிலில் இருந்து நடந்து செல்பவர்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயில்கள் மோதி உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது.

எனவே ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சீரமைத்து பொதுமக்கள் எளிதில் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended