குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாளில் மனு கொடுக்க மக்கள் அவதி.

முகேஷ்

UPDATED: Dec 2, 2024, 12:14:30 PM

குமரி மாவட்டம்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மனுநாள் நடைபெறுவது வழக்கம். திங்கள் கிழமை நடைபெறும் மனுநாளில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி அதற்கான தீர்வை ஏற்படுத்தி வருகிறார்.

எனவே திங்கட்கிழமை நடைபெறும் மனு நாளில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனு வழங்கி வருகின்றனர்.

 

வழக்கம்போல் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க வந்த பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய பல மணி நேரமாக காத்து நிற்கின்றனர்.

அவர்களால் பதிவு செய்ய முடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என தெரிவித்து உள்ளனர்.

வழக்கமாக ஒரு மணிக்குள்ளாக முடிவடையும் மனு நாள் இன்று ஒரு மணி ஆகியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் மனுக்களை பதிவு செய்ய முடியாமல் வரிசையாகவும், அருகில் உள்ள படிக்கட்டில் அமர்ந்தும் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended