- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றம்.
வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றம்.
சண்முகம்
UPDATED: Dec 2, 2024, 9:08:58 AM
கடலூர் மாவட்டம்
வீராணம் ஏரியில் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் 980 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடி உள்ள நிலையில், ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில் தற்போதைய ஏரியின் நீர்மட்டம் 46.10 அடியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு பகுதி மாவட்டங்களில் இருந்து நீர்வரத்து மழை வடிகால் நீர் மூலம் அதிக அளவில் வந்து கொண்டுள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 500 கன அடி தண்ணீர் பூதங்குடி விஎன்எஸ்எஸ் மதகு மூலம் மூன்று ஷட்டர்களும் தூக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரி
மேலும் வெள்ளியங்கால் ஓடை வழியாக 514 கன அடியும், சென்னை குடிநீருக்காக 68 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரியை தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனப் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு