- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கொங்கு திருமண உணவு திருவிழா நுழைவு கட்டணமாக ரூ.800 கொடுத்தும் தட்டை ஏந்த வைத்ததாக பொதுமக்கள் அதிருப்தி.
கொங்கு திருமண உணவு திருவிழா நுழைவு கட்டணமாக ரூ.800 கொடுத்தும் தட்டை ஏந்த வைத்ததாக பொதுமக்கள் அதிருப்தி.
ராஜ்குமார்
UPDATED: Dec 2, 2024, 3:39:42 AM
கோயம்புத்தூர்
விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன.
அதுமட்டுமின்றி பல்வேறு உணவு நிறுவனங்கள் அவர்களது தயாரிப்பு பொருட்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.
இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும் குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். முதல் நாளான 1.11.2024 ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர்.
மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இன்னிலையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் உணவு வழங்குவதில் கால தாமதம் ஆனது.
மேலும் பொதுமக்கள் உணவு வாங்க ஒரே வரிசை மட்டுமே ஒதுக்கபட்டு இருந்தன குழந்தைகள், முதியவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த ஆத்திரமடைந்தவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1000 ரூபாய் வரை செலவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளோம் உணவை கொடுக்காமல் அலைக்கழிக்கிறீர்களே என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உணவை விநியோகிக்க பல வரிசைகளை வைத்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.