தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

ராஜா

UPDATED: Dec 1, 2024, 7:44:23 AM

தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையில் இருந்து தமிழக அரசின் உத்தரவுப்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதமும் கிறிஸ்துமால் நதி பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 752 மில்லியன் கன அடி தண்ணீரும் கிறித்துமால் நதி பாசனத்திற்கு 650 மில்லியன் கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

வைகைஅணை

இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 67,837 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி வருகிறது கிறிஸ்துமால் நதிக்கு கீழ் உள்ள 15,000 மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது 

அணையில் நீர்மின் நிலையம் மற்றும் சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் ஐந்து மாவட்டங்களை கடந்து செல்வதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

இதனால் பொதுமக்கள் யாரும் வைகைஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

VIDEOS

Recommended