- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பெரியார் அணை நீர்த்தேக்க பகுதி ஆனவச்சாலில் மெகா கார் பார்க்கிங்கை அமைக்க கூடாது - விவசாயிகள்.
பெரியார் அணை நீர்த்தேக்க பகுதி ஆனவச்சாலில் மெகா கார் பார்க்கிங்கை அமைக்க கூடாது - விவசாயிகள்.
ராஜா
UPDATED: Dec 1, 2024, 12:40:44 PM
தேனி மாவட்டம்
தமிழக கேரள எல்லை பகுதியான லோயர் கேம்ப்பில் இன்று மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்த்தெங்கும் பகுதிக்குள் வரும் ஆனவாட்சாலை பகுதியல் உள்ள கார்பார்க்கிங் பகுதியை விட்டு பெரியார் புலிகள் காப்பகம் வெளியேறக் கூறி மெகா கார் பார்க்கிங்க இழுத்து மூட கோரி
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணைக்குள் தமிழக பொறியாளர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் கேரளாவின் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அணையை விட்டு வெளியேற வேண்டும். என கோரியும்
பேபி அனைக்குச் செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு ஏற்கனவே கேரள மாநில தலைமை வனப் காவலர் போட்ட உத்தரவை அமல்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கார் பார்க்கிங்
பெரியார் அணை தென் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது தேக்கடி படகுத்துறையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு புள்ளி ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆணவாசல் பகுதி பெரியார் அணையின் முக்கிய நீர்த்தேக்க பகுதியாக உள்ளது
இந்தப் பகுதி தமிழகத்தில் 99 ஆண்டு கால குத்தகை உரிமையில் உள்ள நிலமாகும் 142 அடி நீர் தேங்கினால் ஆணவச்சல் வரை நீர் தேங்கும். அதனால் கேரளா அரசு அந்த கார் பார்க்கிங் திட்டத்தை கைவிட்டு உடனே அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம்,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், மற்றும் ஏராளமான கட்சியினர் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.