13- ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டை மராமத்து செய்து தரக் கோரி மீனவர்கள் மனு.

கார்மேகம்

UPDATED: Dec 3, 2024, 9:46:53 AM

இராமநாதபுரம்

13- ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிக் கொடுத்த சுனாமி வீடுகள் பழுதடைந்த வீடுகளை மராமத்து செய்து தரக் கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் திரளாக வந்து மனு அளித்தனர்

( கலெக்டரிடம் மனு)

ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மீனவ மகளிர் சங்க கன்வீனர் வில்லியம் ஜாய்சி மற்றும் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள்  கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர்

Breaking News Today In Tamil 

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது ராமேஸ்வரம் தாலுகா  தங்கச்சி மடம் ஊராட்சிக்குட்பட்ட அரியாங்குண்டு கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர்

அக் கிராமத்தில் சுனாமியால் பாதித்த 82 மீனவர்களுக்கு கடந்த 2011- ம் ஆண்டு அரசின் சார்பில் இலவச சுனாமி வீடுகள்  கட்டிக் கொடுக்கப்பட்டது

மேற்கண்ட வீடுகள் 13-ஆண்டைக் கடந்த நிலையில் மிகவும் பழுதடைந்து சேதமடைந்துள்ளது 

சுனாமி வீடு

( மராமத்து செய்ய கோரிக்கை)

பொதுவாக இது போன்ற அரசின் இதர திட்டங்களின் கீழ் கட்டி கொடுக்கப்படும் வீடுகளுக்கு மராமத்து பணிக்கான அரசு நிதி உதவி செய்வது போல் மேற்கண்ட சுனாமி வீடுகளுக்கும் மராமத்து பணிக்கு நிதி உதவி வழங்கிட வேண்டும்

மேலும் அரியாங்குண்டு கிராமத்தில் சுனாமி வீடுகள் கிடைக்கப் பெறாத பல குடும்பங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது தவிர  அரியாங்குண்டு கிராமத்திற்குள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் இனைப்பு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அதனை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

 

VIDEOS

Recommended