போரூரில் மணல் லாரி சாலையில் புதைந்ததால் பரபரப்பு.

ஆனந்த்

UPDATED: Dec 3, 2024, 10:04:29 AM

சென்னை

வளசரவாக்கம் மண்டலம் 11க்கு உட்பட்ட 150 வார்டு போரூர் புத்தர் காலனி பிரதான சாலை வழியாக எம் சாண்ட் மணல்களை ஏற்றிக்கொண்டு மணல் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது எதிர்பாராத விதமாக மணல் லாரியின் முன் பகுதி சக்கரங்கள் திடீரென சாலையின் நடுவில் பாதி புதைந்தது.

இதனால் லாரி ஓட்டுனர் செய்வது அறியாது திகைத்து அதிர்ச்சி அடைந்தார் நீண்ட நேரம் போராடி சாலையில் புதைந்த வாகனத்தை ஓட்டுனர் எடுக்க முயன்றார்.

Breaking News Today In Tamil 

இருப்பினும் எடுக்க முடியாததால் பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைத்து மணல் லாரியில் இருந்த மணல்களை சாலையின் ஓரத்தில் கொட்டி விட்டு சாலையில் புதைந்த வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஒரு மணி நேரம் போராட்டத்திற்க்கு பின்னர் சாலையில் புதைந்த வாகனங்கள் அங்கிருந்து மீட்கபட்டது.

மணலை ஏற்றி கொண்டு சென்ற மணல் லாரி திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended