போதிய ஓய்வு இல்லாததால் காவலர்கள் சாலை விபத்துகளில் சிக்குகின்றனர் என ஆவடி காவலரக போக்குவரத்து துணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
ஆனந்த்
UPDATED: Nov 16, 2024, 7:11:01 PM
சென்னை
அயனம்பாக்கம் சுற்றுவட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி பொது செயலாளர் எம்.கே.ஜெயகுமார் தலைமையில் திருவேற்காட்டில் நடைப்பெற்றது.
நூற்றிற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து துணை ஆணையர் அன்பு கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை ஆணையர் போதிய ஓய்வு இல்லாததால் காவலர்கள் சாலை விபத்துகளில் சிக்குகின்றனர் என கூறினார்.மேலும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய சாலை விதிகளை எடுத்துரைத்தார்.
பின்னர் மேடையில் பேசிய திருவேற்காடு தொழிலதிபர் பவுல் உள்ளிட்டோர் காலை நேரங்களில் வானகரம் -அம்பத்தூர் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அதற்கு தீர்வு காணும்படியும் உதவி ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்தனர் .
கவுன்சிலர் பவுலின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வு காண்பதாக உதவி ஆணையர் அன்பு உறுதியளித்தார்.