மதுரவாயலில் பாலியல் தொழில் செய்வதாக பெண்ணை மிரட்டி கற்பழித்து பணம் பறித்த காவலர் கைது.
ஆனந்த்
UPDATED: Oct 25, 2024, 7:28:43 PM
சென்னை
மதுரவாயலை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் தான் மசாஜ் நிலையங்களில் வேலை செய்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கனவருடன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது தனக்கு தெரிந்த பெண் ஒருவருடன் பேசி கொண்டிருந்த நபர் திடீரென வீட்டிற்குள் வந்தபோது யார் என கேட்ட நிலையில் தான் போலீஸ் எனவும் தன்னை விபச்சாரம் தொழில் செய்வதாகவும் தன்னை பிடிக்க வந்திருப்பதாக கூறி தன்னை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும்
அதன் பிறகு தன்னிடம் இருந்து 50,000 கொடுத்த பிறகு மீண்டும் பணம் வேண்டும் என கூறியதால் தன்னுடைய கணவரை ஏடிஎம்க்கு சென்று பணத்தை எடுத்து வர கூறிய நிலையில் அவர் வருவதற்குள் அந்த நபர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு தன்னை மிரட்டி சென்றதாக புகார் அளித்திருந்தார்.
Latest Crime News Today In Tamil
இந்த புகாரின் பேரில் மதுரவாயல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சியை சேர்ந்த போலீஸ்காரர் பாபுஷா(28), என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார் என்பதும் தற்போது ஆயுதப்படையில் டிரைவராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.