ராமாபுரம் அம்மா உணவகத்தில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் உணவகமே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆனந்த்
UPDATED: Dec 5, 2024, 12:46:58 PM
அம்மா உணவகம்
ராமாபுரத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த உணவகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பணிபுரிந்த அதிமுகவை சார்ந்த ஊழியர்கள் தற்போதும் பணிபுரிகின்றனர்.
ஆட்சி மாற்றம் வந்த பிறகு திமுகவை சார்ந்த ஊழியர்கள் புதிதாக சிலர் பணியமர்த்தப்பட்டனர். இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருதரப்பினரிடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.
அதிமுக
இந்நிலையில் தற்போது இருதரப்பில் கைகலப்பு ஏற்படும் நிலைக்கு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.
அதிமுகவைச் சார்ந்த ஊழியர்கள் தினமும் அம்மா உணவகத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வைக்கப்படும் இருப்பு அறையை பூட்டிவிட்டு சாவியை எடுத்துச்செல்வதாகவும், அதனால் தங்களால் பணி செய்ய முடியவில்லை என திமுகவை சார்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திமுக
திமுக ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அதிமுகவினர் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மது போதையில் ஆட்டோக்காரர் ஒருவர் கையில் இரும்பு ராடுடன் இந்த அம்மா உணவகத்தில் வந்து பொருட்கள் வைப்பு அறையின் பூட்டை உடைக்க முயற்சி செய்த நிலையில் அது தொடர்பாக ராமாபுரம் காவல் நிலையத்தில் அம்மா உணவக ஊழியர்களால் புகார் அளிக்கப்பட்டது.
Latest News Today In Tamil
அது தொடர்பாக இன்று முதல் இந்த அம்மா உணவகம் போலீசார் பாதுகாப்புடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று போதையில் இரும்பு ராடுடன் வந்த நபரை திமுகவினர் அனுப்பியதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்
அது தொடர்பாக எது உண்மை என ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
இவ்வாறு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சொல்லி நிர்வாகத்தை முடக்குவதால் அனைவரையும் பணிமாற்றம் செய்துவிட்டு, புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.