• முகப்பு
  • சென்னை
  • டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததை அடுத்து டாஸ்மாக் மேலாளர் அரசு மது கடைகளில் திடீர் ஆய்வு

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததை அடுத்து டாஸ்மாக் மேலாளர் அரசு மது கடைகளில் திடீர் ஆய்வு

ஆனந்த்

UPDATED: Dec 13, 2024, 7:12:25 PM

மாங்காடு

நிர்ணயித்த விலையை விட டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியான புகார் வந்ததை தொடர்ந்து, மாங்காடு, மலையம்பாக்கம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஷியாம்சுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Tasmac

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா மற்றும் அனைத்து மதுபான பாட்டில்களில் க்யூ. ஆர் .கோடு சரியாக உள்ளதா ,டிஜிட்டல் பணபரிவர்த்தனை சரியாக நடைபெறுகிறதா அதேபோல் மது வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய ரசிது வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அரசு மது கடைகளில் கூடுதலாக விலைக்கு மது விற்பனை செய்தாலே ,கூடுதலாக விற்ப்பனை செய்வதாக புகார் வந்தாலே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended