நகராட்சியில் கொட்டும் குப்பையால் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

கோபிநாத் பிரசாந்த்

UPDATED: Dec 16, 2024, 1:43:55 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததாலும் மயானத்தில் குப்பைகள் கொட்டி வந்த நகராட்சியினர், குப்பைகளை மயானத்திலும் கொட்டுவதற்கு இடமில்லாததால் 

தனியார்  பள்ளியின் ( AKT institute ) சாலை யோரம் கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.

மேலும் இந்த கல்வி நிறுவனத்தில் சுமார் 20,000 மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

சில சமயங்களில் அந்த கல்வி நிறுவன வளாகத்தில் அரசு சம்மந்த பட்ட நிகழ்ச்சிகள், தமிழக அரசின் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த வழியாக தான் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம்,அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், காவல்நிலையத்திற்கு, நீதி மன்றத்திற்கு , பத்திரபதிவு அலுவலகத்திற்கும் மற்றும் திருவண்ணாமலை, சங்கராபுரம்,சேலம் போன்ற வழித்தடங்களுக்கு பேருந்து மூலம் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் சூழல் நிலவி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு குப்பை கொட்டுவதற்கு மாற்று இடமோ அல்லது இயந்திரம் மூலம் இயற்கை உரமாகவோ மாற்ற இயந்திரம் பொறுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended