சென்னை, வளசரவாக்கத்தில் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி கல்லால் தாக்கிய நபர் கைது.
ஆனந்த்
UPDATED: Dec 16, 2024, 12:45:10 PM
சென்னை
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வளசரவாக்கம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அந்த பெண்ணுடன் கல்லூரியில் படித்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ ராம்(25), என்பவர் காதலித்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ ராமின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் அவரை விட்டு விலகி உள்ளார்.
Latest Chennai News Today In Tamil
ஆனாலும் ஸ்ரீராம் அந்த பெண்ணை பின் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் அந்த பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற ஸ்ரீராம் தன்னை காதலிக்க வற்புறுத்தி கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.