• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குக்கிராமமாக இருக்கும் 11 ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க தன்னிச்சையாக முடிவெடுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

குக்கிராமமாக இருக்கும் 11 ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க தன்னிச்சையாக முடிவெடுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

லட்சுமி காந்த்

UPDATED: Dec 16, 2024, 10:45:26 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் தொகுதி தலைவர் இ.லாரன்ஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதில், ஊராட்சி மக்களிடமும், தலைவர்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குக்கிராமமாக இருக்கும் 11 ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க தன்னிச்சையாக முடிவெடுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அதில் உள்ள 3500 ஏக்கருக்கு மேற்பட்ட விலை நிலங்கள், 1500 விவசாயிகள், 15,000 மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள், 15 ஏரிகள், 5 தாங்கள், 15 குளங்கள், 50க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள், 100 கிலோமீட்டர் மேல் உள்ள பொதுப்பணி துறை கால்வாய்கள் ,அதை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் என அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது, எனவே ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் 11 ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என தீர்மானம் போட்ட பிறகும், உள்ளாட்சி மக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் எந்த விதமான அறிவிப்பும் செய்யாமல் மாநகராட்சியில் கிராமங்களை இணைக்கும் திட்டம் எவ்வாறு சாத்தியமாகும் எனவும் கேள்வி எழுப்பினர்.

 

VIDEOS

Recommended