• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காஞ்சிபுரம் அருகே உள்ள மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்வி கூடத்தில் 832 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே உள்ள மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்வி கூடத்தில் 832 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

லட்சுமி காந்த்

UPDATED: Dec 17, 2024, 7:05:56 AM

காஞ்சிபுரம்

ஏனாத்தூர் பகுதியில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர்.

ஏற்கனவே படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு நீரிழிவு நோயிற்கான சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான பத்மஸ்ரீ டாக்டர் வி. மோகன் மற்றும் கல்லூரி தாளாளர் கோமதி ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் பட்டங்கள் வழங்கி கெளரவித்தனர்.

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்வி கூடத்தில், 705 இளங்கலை மாணவர்கள், 103 மேற்படிப்பு மாணவர்கள், 24 முனைவர் பட்ட மாணவர்கள் என மொத்தம் 832 மாணவ மாணவிகளுக்கு , பொது மருத்துவம் ,பல் மருத்துவம், நர்சிங் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு பட்டையம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மீனாட்சி மருத்துவக் கல்லூரி 

இந்நிலையில் இணை வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு பேசும்பொழுது, பொருளாதாரம் மேம்பட வேண்டுமெனில் புதிய நவீன கல்வியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நடைபெற்ற இந்த 18 வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் முனைவர் கல்வி பயின்றவர்கள் என சுமார் 832 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. 

அதேபோல் மனித குல மேம்பாட்டுக்கு ஏஎன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் 9 நபர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 

அதேபோல் மருத்துவ பட்டமளிப்பு மாணவி ஹரிதா குமாரி மொத்தம் 11 பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களுக்கு மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணை வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வேளாண்மை மற்றும் இன்ஜினியரிங் மற்றும் கலை கல்லூரிகள் கூடிய விரைவில் தொடங்க உள்ளதாகவும் , தற்போது பி பார்ம் கோர்ஸ்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended