• முகப்பு
  • சென்னை
  • மதுரவாயல் அருகே தரை பாலம் வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரவாயல் அருகே தரை பாலம் வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனந்த்

UPDATED: Dec 16, 2024, 12:59:41 PM

சென்னை

சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளம் செல்லும் தரை பாலத்தை யாரும் கடக்க கூடாது என போலீசார் தடுப்பு வேலைகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தரைப்பாலத்தில் செல்லும் வெள்ளத்தை தடுப்பு வேலிகளைப் பிடித்துக் கொண்டு அபாயகரமாக கடந்து செல்கின்றனர்.

கர்ணம் தப்பினால் மரணம் என அவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மூன்று கிலோமீட்டர் கல்லூரிக்கு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து செல்வதற்காக மாணவர்கள் இவ்வாறு விபரீதமாக கடந்து செல்வது தெரியவந்துள்ளது.

அதே சமயம் கல்லூரிக்கு செல்வதற்காக தற்போதுள்ள தரைப்பாலத்தின் அருகே உயர்மட்ட பாலம் ஒன்று அமைத்து தர வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.

இருப்பினும் இவ்வாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் தரைப் பாலத்தை கடப்பதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் இது தொடர்பாக காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

VIDEOS

Recommended