நடிகை சீதா வீட்டில் நகை காணாமல் போய்விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை.
ஆனந்த்
UPDATED: Nov 22, 2024, 5:51:11 PM
சென்னை
சாலிகிராமம் புஷ்பா காலனி பகுதியை சேர்ந்தவர் நடிகை சீதா (56) இவர் இதே பகுதியில் பல ஆண்டுகளாக வாசித்து வருகிறார்
இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி மாலை தனது தம்பியின் மனைவி கல்பனா என்கிற பெண் அணிந்திருந்த 4.5 சவரன் நகைகளை கழட்டி சிறிய ஹேண்ட்பேகில் கழற்றி வைத்து பெட்ரூமில் உள்ள ஷோபாவில் வைத்துவிட்டு தூங்க சென்றதாகவும் அதன் பிறகு காலையில் எழுந்து பார்க்கும் பொழுது ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
நடிகை சீதா
இந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் நடிகை சீதா வீட்டில் வசிக்கும் சௌந்தரி மற்றும் சந்தியா ஆகியோரை விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதில் சௌந்தரி என்கிற பெண்மணி சீதா வீட்டில் 10 வருடமாக பணியாற்றி வருகிறார்... சந்தியா என்கிற பெண் நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சீதா பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.