• முகப்பு
  • குற்றம்
  • தேனி அருகே இரிடியம் வாங்கிசென்றதாக பெண் உள்ளிட்ட 7 பேரை பிடித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை

தேனி அருகே இரிடியம் வாங்கிசென்றதாக பெண் உள்ளிட்ட 7 பேரை பிடித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை

ராஜா

UPDATED: Dec 22, 2024, 4:02:36 PM

தேனி மாவட்டம்

சின்னமனூர் பகுதியில் இருந்து இரண்டு கார்களில் இரிடியம் கடத்தி வருவதாக ஆண்டிப்பட்டி காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் ஆண்டிப்பட்டி காவல்நிலையம் முன்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது தேனியில் இருந்து வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல்துறையினர் சந்தேகமடைந்து காரை சோதனை செய்தனர்.

இரிடியம் கடத்தல்

அப்போது ஒரு காரில் இருந்த சாக்கு பைக்குள் இருந்த பெட்டியை திறக்கும்படி காவல்துறையினர் கூறியபோது

அவர்கள் அந்த பெட்டியில் இரிடியம் இருப்பதாகவும், முறையான பூஜை செய்து திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து காரில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரை ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Latest Crime News Today In Tamil 

மேலும் காரில் இருந்த மர்ம பெட்டியையும், அவர்கள் வந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். 

அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் இருந்து 

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 10 லட்சம் பணம் கொடுத்து இரிடியம் வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.

Theni News Today In Tamil 

இதையடுத்து அவர்களிடம் இரிடியம் விற்பனை செய்த நபரின் விவரங்கள் கேட்டறிந்து அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காரில் இரிடியம் கடத்தி வந்ததாக பெண் உள்பட ஏழு பேர் சிக்கிய நிலையில், அவர்களின் பெயர் விவரங்கள், அந்த மர்ம பெட்டியில் இரிடியம் இருந்ததா என்பது குறித்து காவல்துறை தெரிவிக்க மறுத்துள்ளனர்.

இச்சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended