திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இருவர்.
JK
UPDATED: Dec 17, 2024, 6:14:52 PM
திருச்சி
போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கவும் அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல்துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தபோது தேனி கடம்பலாக குண்டு ஆண்டிபட்டியை சேர்ந்த பிச்சை மகன் சிலம்பு ராஜா ( 36 ) என்பவரிடமிருந்து சுமார் 8.30 கிலோ எடை கொண்ட 4 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்தனர்.
கஞ்சா
இதேபோல் திருச்சி ரெட்டமலை ரோடு பகுதியில் விக்னேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் சம்பவ இடம் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி விசாரித்ததில் ராம்ஜி நகரை சேர்ந்த அசோக் என்பவரது மகன் விக்னேஷ் என தெரியவந்தது. பின்னர் அவர் வசம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பிரேமா மற்றும் சக்திவேல் என்பவரது மகன் விசு என்ற விஸ்வநாதன் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள். இவர்கள் இருவரையும் மதுவிலக்கு காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.