திருச்சியில் நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிட்ட டாட்டூ கடை உரிமையாளர்.
JK
UPDATED: Dec 16, 2024, 3:50:54 PM
திருச்சி மாவட்டம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்தார்.
பாம்பு, ஓணான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பதுபோல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி அதை அவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார்.
மேலும், அவர் தன்னுடைய நாக்கை பிளவுப்படுத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அதனை பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்களுடைய நாக்கை பிளவுபடுத்தி கொண்டனர்.
அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து அறிந்த திருச்சி மாநகர காவல்துறையினர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது அவர் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில் ஹரிஹரனையும், அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், காவல் துறையினர் அளித்த புகாரின் பேரில்திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.